Indian Railways News => Topic started by eabhi200k on Nov 23, 2012 - 15:00:31 PM


Title - district news | ரவீந்திரநாத் தாகூர் வரலாற்று க
Posted by : eabhi200k on Nov 23, 2012 - 15:00:31 PM

சென்னை:ரவீந்திரநாத் தாகூரின், வாழ்க்கை வரலாற்று சிறப்பு ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, இன்றிரவு மதுரைக்கு செல்கிறது.
இந்திய தேசிய கீதத்தை இயற்றிய, கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, அவரது வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில், "அருங்காட்சியகம்' சிறப்பு ரயில் "சம்ஸ்கிரிதி' என்ற பெயரில், இந்தியா முழுவதும் சுற்று பயணம் செய்து வருகிறது.
ஐந்து பெட்டிகளுடன் இயக்கப்படும், இந்த ரயிலில், முதல் பெட்டியில், தாகூரின் வாழ்க்கை, நினைவலைகள், சாந்தி நிகேதன், ஸ்ரீநிகேதன் தொடர்பான படங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.இரண்டாவது பெட்டியில் பாடல்களும், கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது பெட்டியில், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் மற்றும் தாகூரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.இன்று இரவு, 8:00 மணி வரை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்படும். பிறகு இங்கிருந்து புறப்பட்டு, நாளை, நாளை மறுநாள் மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். 25ம் தேதி இரவு, 8:00 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் கொல்லத்திற்கு செல்லும்.